அசாமில் மழை ஓய்ந்தும் வடியாத வெள்ள நீர்..! வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்..!

அசாமில் மழை ஓய்ந்தும் வடியாத வெள்ள நீர்..! வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்..!

அசாமில் மழை ஓய்ந்தும், வெள்ளம் வடியாத நிலை காணப்படுவதால் கிராம மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலத்தில் கடந்த சில தினங்கள் கொட்டி தீர்த்த கனமழையால் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இதில் சிக்கி 26 பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை ராணுப்படையினர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மிகுந்த பாதிப்புக்குள்ளான நகோவான் மாவட்டத்தின் ரோகா கிராமத்தில், வெள்ளத்தில் மிதக்கும் வீடுகளை விட்டு அத்தியாவசிய தேவைக்கு வெளியேறும் மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.