மறைந்த முப்படை தளபதியான பிபின் ராவத்துக்கு - பத்ம விபூஷன் விருது அறிவிப்பு!!

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்த 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முப்படை தளபதியான பிபின் ராவத்துக்கு - பத்ம விபூஷன் விருது அறிவிப்பு!!

அதன்படி மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருதினை அறிவித்துள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே சிறந்த பேராயுதமாக இருக்கும் நேரத்தில் இந்தியத் தயாரிப்புகளான பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தான் இந்தியாவில் பரவலாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சிரஸ் பூனாவாலாவுக்கும், கிருஷ்ண எல்லா மற்றும் சுசித்ரா எல்லாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைத் துறையில் பிரபா ஆத்ரே, இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் உத்தரப் பிரதேசத்தின் ராதேஷ்யாம் கெம்கா, சிவில் சர்வீஸ் துறையில் ஜெனரல் பிபின் ராவத், பொது சேவை பிரிவில் கல்யாண் சிங் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் மறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.