இன்று பொறுப்பேற்கிறார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து...

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து  இன்று பொறுப்பேற்கிறார். இந்த  விழாவில் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று பொறுப்பேற்கிறார் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து...

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில்  முதல்வர் அமரீந்தருக்கும், முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். முதலமைச்சர் அமரீந்தரின் எதிர்ப்பை மீறி சித்து நியமிக்கப்பட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும்  இருவரின் சந்திப்பும் நிகழும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால்  தன்னை அவதுாறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, சித்துவை சந்திக்கப்போவது இல்லை என, அமரீந்தர் திட்டவட்டமாக கூறிய நிலையில்  மாநில காங்கிரஸ்  தலைவராக சித்து இன்று பொறுப்பேற்க உள்ளார். அந்த விழாவில், பங்கேற்க முதலமைச்சர் அமரீந்தருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை  ஏற்று சித்துவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்