கோவாவில் நாய்க் கோவில் - தெரு நாய்களுக்கு சொர்க்க இடமாம்!!

தெரு நாய்கள் அனைத்திற்கும் தங்கும்  சொர்க்க இடமாக செயல்பட்டு வருகிறது நாய் கோவில்.

கோவாவில் நாய்க் கோவில் - தெரு நாய்களுக்கு சொர்க்க இடமாம்!!

மாண்ட்ரெம் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் கிர்கர்வாடோவில் 'நாய் கோவில்' அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது நாய்களுக்கு பிரார்த்தனை செய்ய மக்கள் செல்லும் கோவில் அல்ல, இந்த நாய் கோவில் அனைத்து கைவிடப்பட்ட தெரு நாய்களுக்கும் தங்கும் சொர்க்க இடமாக உள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்தவர் இங்கோ (அவரது பெயர்), சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாய் கோவிலைத் செயல்பட தொடங்கியுள்ளார். அதன் பிறகு அவரது வீடு சுமார் 70 நாய்களுக்கு நிரந்தர இல்லமாக மாறியது. அவர் நாய்களுக்கு உணவளித்து, கடற்கரைக்கு அழைத்துச் சென்று விளையாடு மகிழ்ந்து வருகிறார். 

அவரால் பார்த்துக் கொள்ளப்படும் நாய்களில் சிலது பார்வை அற்றவையாகவும் சிலது உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டவையாகவும், மேலும் சில நாய்கள் அதனின் உரிமையாளர்கள் துரத்திவிட்டவை எனவும் இங்கு நாய்களை சங்கிலி கொண்டு கட்டி வைக்க வில்லை அதனுடன் அதற்கு நல்ல உணவளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு, அன்புடன் பார்த்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில் இந்த நாய்களை மீனவர்கள் வெறுத்து வருவதாகவும் நாய்களுக்கு நான் அடைக்கலம் கொடுத்து வருவதால் அவர்கள் தன்னையும் வெறுத்து வருவதாக கூறிய அவர் நாய்களை அவர்கள் வெறுப்பதோடு மட்டுமல்லாமல் அடித்து கொலை செய்யவும் முயன்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று தொடங்குவதற்கு முன்பு தினசரி பலர் இங்கு வந்து  நாய்களுக்கு உணவு சமைத்து அவைகள் குளிப்பதற்கு உதவி செய்தனர். சிலர் எப்போதும் உதவ தயாராக இருக்கிறார்கள். நாய்கள் தூங்கும் மற்றும் ஓய்வெடுக்கும் படுக்கைகள் முதல் நாய்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம்கள், புதிய காலர்கள் மற்றும் வண்ணமையமான பொம்மைகள் வரை பரிசுகளை நாய்களுக்கு கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.