மதுபான கடத்தலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர் மர்ம மரணம்...

மதுபான கடத்தலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிக்கையாளர் மர்ம மரணம்...

மதுபான கடத்தல் கும்பல் பற்றிய தகவலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிகையாளர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
Published on

உத்தரபிரதேசம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த சுலப் ஸ்ரீவத்சவா என்ற பத்திரிகையாளர், கடந்த 9ம் தேதி அம்மாவட்டத்தில் செயல்படும் மதுபான கடத்தல் கும்பல் பற்றிய தகவலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தார். அதன்பின், தன்னை பலர் பின்தொடர்வது போன்ற அச்சம் நிலவுவதாகவும், எனவே பாதுகாப்பு வழங்க கோரியும் சுலப், காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தநிலையில் நேற்றிரவு அவர் பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது அங்குள்ள செங்கல்சூளை அருகே அடிபம்பில் மோதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. போலீசார் சாலை விபத்தில் இறந்ததாக கூறியபோதும், அவரது மேல்சட்டை அகற்றம் மற்றும் முகத்தில் இருந்த ரத்த காயங்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கையாளர் மரணம் குறித்து எவ்வித பதிலும் அளிக்காமல் உத்தரபிரதேச அரசு தூங்கிக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com