வாதாட வந்த வக்கீலை சிறையிலே திருமணம் செய்த ஜூலியன் அசாஞ்சேவு...!

ஜூலியன் அசாஞ்சேவுக்கு சிறையில் திருமணம்...!

வாதாட வந்த வக்கீலை சிறையிலே திருமணம் செய்த ஜூலியன் அசாஞ்சேவு...!

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிஸை லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொள்கிறார்.

ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலியும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக  ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராகவும் இருந்து வரும் ஸ்டெல்லா மோரிஸ் என்பவரை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.