ஆளுநரின் டிவிட்டர் கணக்கை பிளாக் செய்த மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்கத்தின் மாநில ஆளுநரான ஜெகதீப் தன்காரின் டிவிட்டர் கணக்கை முடக்கி விட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் டிவிட்டர் கணக்கை பிளாக் செய்த மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்கத்தின் முதல்வரான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய அவர் ஆளுநர் ஜெகதீப் தன்கார் நாள்தோறும் எனது அரசுக்கு எதிரான கருத்துக்களையும் செய்திகளையும் சமூக வலைதளபக்கங்களில் பகிர்ந்து  வருவதாக தெரிவித்தார். இவரின் இப்படிப்பட்ட இந்த செயல்களால் நான் என் அமைதியை இழந்தேன் என கூறுகிறார். எனவே நான் ஆளுநரின் டிவிட்டர் பக்கத்தை முடக்கி விட்டேன். அவர் பலமுறை தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டி வந்துள்ளார். இதனால் ஆளுநர் தன்காரை பதவி நீக்கம் செய்ய சொல்லி பலமுறை பிரதமருக்கு நான் கடிதம் எழுதிவிட்டேன் இருப்பினும் இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத படியே உள்ளதாக தெரிவித்துள்ளார்.