கேரளா - தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு.!!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறித்த பிரச்சனையில், தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்கு இடையே ஒத்துழைப்பு இல்லை என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் உச்சபட்ச நீர்தேக்கும் வரம்பு தொடர்பாக தமிழக - கேரளா இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. 

இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசுகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இது மிகவும் தீவிரமான பிரச்சனை என்று கூறிய நீதிபதிகள், மக்களின் உயிர் மற்றும் உடைமை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.  

இந்தப் பிரச்சனையில் மனுதாரர்கள் தங்கள் வேலைகளைச் சரியாக செய்யும் பட்சத்தில், நாங்கள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர். 

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, அணையைத் திறப்பது தொடர்பாக கலந்தாலோசித்து விட்டு விளக்கம் அளிப்பதாகத் தெரிவித்தது. 

இதை அடுத்து கேரளாவின் பதற்ற நிலையைப் புரிந்து கொண்டு, மத்திய அரசு விரைவாகப் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.