சர்வதேச விமான சேவைக்கான தடை பிப்-28 வரை நீட்டிப்பு.!!

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடையை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. 

சர்வதேச விமான சேவைக்கான தடை பிப்-28 வரை நீட்டிப்பு.!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் இன்றையளவும் பாதிப்பு குறையாத நிலையில் ஒவ்வொரு முறையும் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அதனைதொடர்ந்து மீண்டும் கொரோனா பாதிப்பு குறைந்ததால் டிசம்பர் 15-ம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து  தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பல நாடுகளிலும் பரவத் தொடங்கியதால் 15-ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து தொடங்காது என்று அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், சர்வதேச விமான பயணிகள் சேவைக்கான தடை , பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இந்த தடை சா்வதேச சரக்குப் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளிக்கும் சிறப்பு சேவைகளுக்குப் பொருந்தாது என்றும் விமான கட்டுப்பாட்டகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விமான சேவைகள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.