ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்

மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளதையடுத்து, தஞ்சையில் குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

ஜூன்  12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம்

வருகிற ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து  குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடிக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.  தண்ணீர் திறப்பதற்குள் வயல்வெளிகளில் குறுவை சாகுபடிக்கு நாற்றங்கால் தயார் செய்யும் பணியை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக, குருவை ரகமான ஆடுதுறை 36 ரக நெல் நாற்றங்கால் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தயார் செய்யப்பட்ட நாற்றங்கால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நடவு பணிக்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.