ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்.!!!

பிரதமர் மோடி இன்று இரவு ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்.!!!

உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா தொடர்ந்து வீரர்களை குவித்து வந்தநிலையில், இன்று உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டு மழையை பொழிந்து வருகின்றனர். இந்த தாக்குதலில் சுமார் 100 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் இந்தியாவிற்காக உக்ரைன் தூதர் இகோர் பொலிகா இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு உக்ரைன் மீதான போரை நிறுத்த பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.