உறைய வைக்கும் பனியில் போர் பயிற்சி செய்யும் இந்தோ - திபெத் காவல்படை !

உறைய வைக்கும் பனியில் போர் பயிற்சி செய்யும் இந்தோ - திபெத் காவல்படை !

இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையினர் உயரமான பனிச்சிகரத்தில் மைனஸ் 25 டிகிரி குளிரில் போர் ஒத்திகையில் ஈடுபடும் காணொளிக்காட்சி வெளியாகியுள்ளது. உத்தரகண்ட் மாநிலதத்தில் உள்ள இமய மலைச்சாரலில் இந்திய சீன எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியை இந்தோ-திபெத் காவல் படை மேற்கொள்கிறது. மிகவும் சவாலான பணியில் இந்த சிறப்பு துணை ராணுவப்படையினர் ஆண்டு முழுவதும் நிலவும் குளிரான சூழலில் எல்லைப் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மிகவும் உயரமான பனிச்சிகரத்தில் அந்த வீரர்கள் சுமார் மைனஸ் 25 டிகிரி உறை பனியில் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ வெளியாகியுள்ளது