வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்...!

வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்...!
Published on
Updated on
1 min read

வாஷிங்டனில் காலிஸ்தானிய போராட்டத்தின் போது இந்திய பத்திரிகையாளர் தாக்கப்பட்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.

சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் தனியாக வசிப்பதற்காக, பஞ்சாப்பை தனிநாடாகக் கேட்டு காலிஸ்தான் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில் காலிஸ்தானிய தலைவரான பஞ்சாப்பின் அம்ரித்பால் சிங் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தப்பியோடியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாஷிங்டனின் இந்தியத் தூதரகத்தின் வெளியே காலிஸ்தானியப் போராட்டத்தை செய்தியாக்கிக் கொண்டிருந்தபோது, லலித் ஜா என்ற இந்திய பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார். தடிகளால் தாக்கப்பட்ட அவருக்கு, அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com