இந்தியா பேச்சு உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது - நெதர்லாந்து எம்.பி !

பொருளாதார காரணத்துக்காக இந்தியா தனது பேச்சுரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என நெதர்லாந்து எம்.பி ஒருவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இந்தியா பேச்சு உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது - நெதர்லாந்து எம்.பி !

நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதாக அண்மையில் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இவருக்கு சர்வதேச அளவில் கண்டனம் குவிந்து வரும் நிலையில், ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  

இந்தநிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நெதர்லாந்து எம். பி கீர்ட் வைல்டர்ஸ், உண்மை பேசியதற்காக ஒருவர் தண்டிக்கப்படவோ,  மன்னிப்பு கேட்கவோ வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பேச்சுரிமை தவறாக பயன்படுத்தப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பொருளாதார காரணத்துக்காக இந்தியா தனது பேச்சு உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.