முகேஷ் அம்பானியின் வீட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அம்பானி வீடு குறித்து சிலர் விசாரித்ததாக கால் டாக்சி ஓட்டுனர் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்புகொண்ட கால் டாக்சி ஓட்டுனர் ஒருவர், மர்ம நபர்கள் இரண்டு பேர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாகவும், அந்த நபர்கள் மர்ம பை ஒன்றை வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் வீட்டருகே சில மாதங்களுக்கு முன்னர், வெடிபொருட்கள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இச்சம்பவம் மும்பையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.