காங்கிரஸ் காரியக் கமிட்டியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை?

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்கவில்லை?

காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85வது மாநாடு, கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் தலைமையில் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தொடங்கியுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85வது மாநாட்டில், 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க : கட்சி அலுவலகத்தில ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ் மரியாதை...!

இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த காங்கிரஸ் மாநாட்டில், 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் மட்டுமின்றி கட்சியின் உயர்மட்டக் குழுத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் பரவிய நிலையில், மாநாட்டில் மல்லிகார்ஜூன கார்கே சுதந்திரமாக முடிவெடுக்கும் வகையில் இவர்கள் 3 பேரும் இதில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.