யாரையும் அடிமைப்படுத்தும் எண்ணம் தமக்கில்லை ....சர்ச்சை வீடியோ குறித்து திருமா விளக்கம்...!

யாரையும் அடிமைப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

யாரையும் அடிமைப்படுத்தும் எண்ணம் தமக்கில்லை ....சர்ச்சை வீடியோ குறித்து திருமா விளக்கம்...!

மக்களவை உறுப்பினர் தொல் திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறுகையில்,

எதிர்க்கட்சிகளை நசுக்கும் வகையில் ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது. 12 எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் என்பது நாடாளுமன்ற மற்றும் சட்டத்திற்கு எதிரானது. ஜனநாயகத்தின் குரல்வலையை நெறுக்கிறது என்பதற்க்கு ஆளும் அரசின் செயல்பாடு சாட்சியாக உள்ளது என்றார்.  

மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் பருவமழையால் பெரும் சேதங்களை கண்டு வரும் நிலையில் மத்திய அரசு உடனடியாக போதிய நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், எந்த தேக்கமும் இல்லாமல் நிதி வழங்கபடும் நிதி அமைச்சர் தெரிவித்ததாக திருமா கூறினார். 

அடிமை படுத்தல் போன்ற நிலை எனக்கு இல்லை என்பது குற்றம்சாட்டும் பாஜக போன்ற கட்சிகளுக்கு தெரியும் என்றும்! கட்சி தொண்டர்களுடன் நல்ல உறவு உள்ளதாக தெரிவித்த திருமா, தமிழகத்தில் பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அதனையெல்லாம் விட்டுவிட்டு கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்யும் எங்களை திட்டமிட்டு அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள் என விளக்கம் அளித்தார். 

நான் தங்கியுள்ளது என் வீடு அல்ல! அது எங்கள் அறக்கட்டளை அலுவலகம்! ஒவ்வொரு மழையின் போது மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வரும்; அத்தகைய சமயங்களில் கூட நான் என் தொண்டர்களை விட்டு அங்கிருந்து சென்றதில்லை என்றார். மேலும், டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சேர் மீது ஏறி நடந்து சென்றேன், அப்போது தான் விழாமல் இருக்க சக தொண்டர்கள் தன்னை சுழ்ந்து பார்த்து கொண்டார்கள் என விளக்கமளித்தார்.