பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத முதல்வர், மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்? - அமைச்சர் அமித்ஷா கேள்வி!

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்காத முதல்வர், மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்? - அமைச்சர் அமித்ஷா கேள்வி!

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியால், பஞ்சாப் மக்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாபில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை பயன்படுத்தி,  மாஜி முதல்வர் அமரிந்தர் சிங் உதவியுடன் அங்கு ஆட்சி அமைக்க  பாஜக திட்டமிட்டு வருகிறது. இந்தநிலையில் லூதியானாவில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி  வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமித் ஷா, பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என சரண்ஜித் சிங் சன்னி கனவு கண்டு கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். ஆனால் பிரதமரின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்யாத  சன்னி, மக்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பு அளிப்பார் என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் 4 நகரங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.