நிலச்சரிவால் உருக்குலைந்து போன தலைநகர் - சேறு சகதியில் மிதக்கும் வீடுகள்!!

நிலச்சரிவால் உருக்குலைந்து போன தலைநகர் - சேறு சகதியில் மிதக்கும் வீடுகள்!!

ஈக்வடார் தலைநகரான கியூட்டோ பகுதியில்  நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. சேறு கலந்த  சகதியால் சூழப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள கார்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால், ஏராளமான குடியிருப்பு பகுதிகளை சகதி கலந்த மழைநீர் சூழ்ந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. நிலச்சரிவால், இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காயத்துடன் மீட்கப்பட்ட 50க்கும் அதிமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குடியிருப்புகளை சூழ்ந்திருக்கும் சேரை அகற்றி வரும் மீட்பு படையினர், மாயமான பலரையும் தேடி வருகின்றனர்.