அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து மத்திய அரசுப் பணிகளுக்கு பொதுதகுதி தேர்வு...

அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து மத்திய அரசுப் பணிகளுக்கு நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து மத்திய அரசுப் பணிகளுக்கு பொதுதகுதி தேர்வு...

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட தலையீட்டினால், இந்தாண்டு இறுதியில் நாடு முழுவதும் பொதுத் தகுதித் தேர்வுகள் நடக்கவிருந்தன. இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தேர்வுகள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முறையை எளிமை படுத்துவதற்காக, பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் திருப்புமுனைச் சீா்திருத்தமாக இந்த பொதுத் தகுதித் தேர்வு அமைந்துள்ளளதாகவும், இளைஞா்கள் மீது பிரதமா் மோடி வைத்திருக்கும் அக்கறையின் அடையாளமாகவும், நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் இந்த சீா்திருத்தம் அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தகுதித் தேர்வை நடத்துவதற்காக மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆள்சோப்பு முகமை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அரசுப் பணியாளா் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கிப் பணியாளா் தேர்வாணையம் ஆகியவற்றால் தற்போது அரசுத் துறைகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கு பதிலாக, பொது தகுதி தேர்வை தேசிய ஆள்சோப்பு முகமை நடத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.