6 முறை முதலமைச்சராக இருந்தவர்... இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ரா சிங் காலமானார்...

இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ரா சிங் காலமானார்.

6 முறை முதலமைச்சராக இருந்தவர்... இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ரா சிங் காலமானார்...
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான வீர்பத்ரா சிங் காலமானார். அவருக்கு வயது 87. 6 முறை இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பதவி வகித்த விர்பத்ரா சிங், உடல் நோயால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
 
கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் மோஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  9 முறை எம். எல்.ஏ-வாகவும், 5 முறை எம்.பி-யாகவும், 6 முறை முதலமைச்சராகவும் இருந்தவர் வீர்பத்ரா சிங். இவரது இழப்பிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.