அரியவகை பறவைகளை வேட்டையாடி விற்பனை - பறிமுதல் செய்த வனத்துறையினர்!!

அரியவகை பறவைகளை வேட்டையாடி விற்பனை - பறிமுதல் செய்த வனத்துறையினர்!!

புதுச்சேரியில் அரிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி  வனத்துறையினருக்கு சொந்தமான பகுதியில் உள்ள கிராமங்களில் அரியவகை பறவைகள் உட்பட கொக்கு, கிள், மைனா உள்ளிட்ட பறவைகள் வேட்டையாடப்பட்டு விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கூடப்பாக்கம் பகுதியில் கொக்கு உள்ளிட்ட அரிய வகை பறவைகள் வேட்டையாடப்பட்டு சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.   இதையடுத்து 25 - க்கும் மேற்பட்ட பறவைகளை கைப்பற்றிய வனத்துறையினர்  தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.