ரசாயண வர்ணம் பூசப்பட்ட 4.9 டன் எடையுள்ள அப்பளங்களை பறிமுதல் செய்த - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!!

ரசாயண வர்ணம் பூசப்பட்ட 4.9 டன் எடையுள்ள அப்பளங்களை பறிமுதல் செய்த - உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!!

4.5 டன் எடையுள்ள உடலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட ரசாயண வர்ணம் பூசபட்ட சுமார் 4  இலட்சம் மதிப்புள்ள அப்பளம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யபட்டது.சென்னை செளகார்பேட்டை வரதப்ப முத்தையா தெருவில்  இயங்கி வரும் பிரபல அமர & கோ அப்பள குடோனில் உணவு பாதுகாப்பு  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் இதில் தடைசெய்யபட்ட உடலுக்கு அதிக கேடு விளைவிக்கும் ரசாயணம் பூசபட்ட அப்பளங்கள் இருப்பது தெரியவந்தது  சுமார் 4.5 டன் எடையுள்ள அப்பளங்களை அதிகாரிகள் தற்போது பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் மற்ற அப்பளங்களிலும் ரசாயணம் கலந்துள்ளதா என ஆய்வு மேற்கொள்ள மாதிரிகளை எடுத்து சென்றுள்ளனர்.மேலும் இங்கு மீதமுள்ள மற்ற உணவு சேமியா,சோயா  பொருட்களிலும் இரசாயணம் சேர்க்கபட்டுள்ளதா என  ஆய்வுக்காக மாதிரிகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். குறிப்பாக உணவு பொருட்களின் காலாவதியான தேதிகளையும் சரி பார்த்து சோதனை செய்தனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு அதிகாரி  சென்னையில் அப்பளங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை  தண்டையார் பேட்டையில் இயங்கி வருகிறது அங்கு ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு சீல் வைக்கபட்டது. இது போன்று வேறு எங்கேயாவது விற்பனைக்காக குடோனில் வைத்திருந்தால் தாங்களாகவே அப்புறபடுத்தி விடவும் இல்லையேல் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் எனவும் ஒவ்வொரு அப்பளத்திற்கும் ஒவ்வொரு இரசாயணம் கலந்த வர்ணம் பூசபடுகின்றது இதனால் வயிற்று கோளாறு குறிப்பாக  குழந்தைக்கு மூச்சு தினறல் நாளடைவில் சீறுநீரகம் செயலிழப்பு போன்போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். எனவும் அவர் தெரிவித்தார். மேலும் ஆன் லைன் மூலம் டெலிவரி செய்யக்கூடிய உணவுகளை முறையாக பார்சல் செய்யவும் அறவுறுத்பட்டுள்ளது .