தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாய படுத்தக் கூடாது - மத்திய அரசு தெரிவிப்பு!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை கட்டாய படுத்துதல் கூடது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாய படுத்தக் கூடாது - மத்திய அரசு தெரிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்,அதற்கான சான்றிதழ்களை பொது இடங்களில் காண்பிக்கும் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாய படுத்த முடியாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பத்திரிக்கை சமூகவலைதளம் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.

அதில் தனிப்பட்ட ஒரு நபரின் விருப்பதிற்கு மாறாக யாரையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாய படுத்த முடியாது.எந்தவித நடவடிக்கைக்கும் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என எந்த விதமான விதிமுறைகளும் மத்திய அரசு விதிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.