இந்தியாவில் மேலும் ஒரு புதிய தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி...

இந்தியாவில் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் மேலும் ஒரு புதிய  தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி...
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா ஆகிய கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மக்களுக்கு இரு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு டோஸ் மட்டும் செலுத்தக்கூடிய வகையிலான கொரோனா தடுப்பூசியை, அமெரிக்காவின் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் கண்டுபிடித்திருந்தது.
இதனையடுத்து, அதனை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்க கோரி, நேற்று ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் கேட்டிருந்தது. அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் மேலும் தீவிரமாக செயல்பட ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசி உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியுடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை 5 நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.