ஃபேஸ்புக் என்ற பெயரை மாற்ற மார்க் ஜுக்கர்பெர்க் திட்டம்..?

பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் தனது பெயரை மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் என்ற பெயரை மாற்ற மார்க் ஜுக்கர்பெர்க் திட்டம்..?

பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் தனது பெயரை மாற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 “மெட்டாவர்ஸ்” என்ற டிஜிட்டல் உலகில் பணியாற்றுவதற்காக ஒரு தயாரிப்புக் குழுவை ஃபேஸ்புக் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் பயனர்கள் காணொலி வாயிலாக நேரடியாக தொடர்பு கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

அதாவது காட்சிகளை காணொலி வாயிலாக கண்களால் பார்ப்பது போல் அன்றி அச்சூழலில் நாம் இருப்பது போன்று உணரும் வகையில் மெய்நிகர் ரியாலிட்டி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஃபேஸ்புக்கின் “மெட்டாவர்ஸ்” அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் புதிய பெயர் மாற்றம் செய்ய ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார். இது குறித்து வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள நிறுவன இணைப்பு மாநாட்டில் பேச திட்டமிட்டுள்ளாராம்.