ரூ.2000 நோட்டுகளை திரும்பப்பெறும் காலக்கெடு நீட்டிப்பு...!

Published on: 
Updated on: 
1 min read

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு 2 ஆயிரம் நோட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில், செலவாணி மேலாண்மை நடவடிக்கைகளின் கீழ் அவற்றை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, கடந்த மே 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அரசு ஆம்னி பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது என முன்னதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 2ம் தேதி நிலவரப்படி 93 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும் மாற்றிக் கொள்வதற்குமான காலக்கெடுவை அக்டோபர் 7ம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. புழக்கத்தில் இருந்த 96 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 8ம் தேதிக்கு மேல், இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் 19 அலுவலங்களில் மட்டும் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை, நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com