எலும்பும் தோலுமாக ஒரே வீட்டிற்குள் ஒன்றரை வருடமாக வசித்த குடும்பம்: ஆந்திராவை உலுக்கிய கொடூர சம்பவம்

ஆந்திராவில் கொரோனா பயத்தால் வீட்டிலே அடைத்து வைக்கப்பட பெண்கள் எலும்பும் தோலுமாக இருந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எலும்பும் தோலுமாக ஒரே வீட்டிற்குள் ஒன்றரை வருடமாக வசித்த குடும்பம்: ஆந்திராவை உலுக்கிய கொடூர சம்பவம்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கதலி என்ற கிராமத்தில்  சைச்சிள் கடை வைத்துள்ள ஜான் பென்னி 50 வயதான இவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் உள்ளனர்.இந்நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம், இந்தியாவில் தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில், ஜான் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒரு பெண், தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததுள்ளார். இந்த பெண் இறந்ததில் இருந்து, ஜான் மனைவி ரூத், மற்றும் 2 மகள்களும் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வரமால் இருந்துள்ளனர்.

 வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் எங்கேயாவது காய் வாங்க, போகணும் என்றாலும் ஜானும், அவரது மகன் பென்னியும்தான் போய் வருவார்களாம். அதுவும் எப்போழுதுவதாக தான் செல்வார்கள் என கூறப்படுகிறது.மொத்தமாக பொருட்களை வாங்கி கொண்டு வந்து, மறுபடியும் வீட்டுக்குள் அடைந்து கொள்வார்கள்

 இந்த நிலையில் வீட்டில் உள்ள மூன்று பெண்கள் வாசற்படியில் வந்துகூட 3 பேரும் நிற்க மாட்டார்களாம்.அக்கம்பக்கத்தினரும் பேசினாலும் தொற்று பரவிவிடும் என்று, யாரிடமும் பேசாமல் இருந்துள்ளனர். இந்த சூழலில்தான், முதலமைச்சரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஜானுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை தெரிவிப்பதற்காக, பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் ஜான் வீட்டுக்கு சென்றார்..ஆனால், அவரை வீட்டிற்குள்ளே சேர்க்கவில்லை.. அப்போதுதான் அங்கிருந்த 3 பெண்களின் நிலைமையை ஓரளவு யூகித்து அதிர்ந்து போனார்.உடனடியாக போலீசுக்கு சென்று விஷயத்தை தெரிவித்தார்.

 தகவலறிந்து ஜான் வீட்டிற்கு வந்த போலீசார் கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமாகவே வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் குடும்பத்தை பார்த்து மிரண்டனர்.5 பேரின் உடல்நலமும் பாதிக்கப்பட்டிருந்து தெரியவந்தது. 3 பெண்களும் உடல்மெலிந்து, அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டனர்

 இதனையடுத்து அவர்களை மீட்ட போலீசார் கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து வந்து, சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.. சிகிச்சையில் அவர்களை சோதனை செய்த மருத்துவர்கள் அதற்கு மேல் அதிர்ச்சியடைந்தனர்.3 பெண்களுக்குமே சூரிய ஒளி உடம்பில் படாத காரணத்தினால் வைட்டமின் -டி பிரச்சனை வந்துள்ளது.மேலும் ஹீமோகுளோபினும் குறைந்து போயுள்ளது.. வெளிஉலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்ததால், மனநிலை பாதித்தது போலவும் குழப்ப நிலையில் இருக்கிறார்களாம்.. தொடர் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.இந்த சம்பவம் ஆந்திராவையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.