16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை 3 வயது சிறுவனுக்கு செலுத்திய மருத்துவர்கள்...

மரபணு கோளாறு காரணமாக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த 3 வயது சிறுவனுக்கு உலகின் விலை உயர்ந்த மருந்து செலுத்தப்பட்டது.  

16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை  3 வயது சிறுவனுக்கு செலுத்திய மருத்துவர்கள்...

அயான்ஷ் குப்தா என்ற 3 வயது சிறுவனுக்கு தண்டுவட பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நோயால், சிறுவனின் தசைகள் தளர்வடைந்து, தனது கை கால்களைக் கூட அசைக்க முடியாமல், உட்காரவோ, நிற்கவோ இயலாமல் இருந்து வந்தான். அவ்வளவு ஏன், வாயில் ஊட்டப்படும் உணவைக் கூட அவனால் மென்று விழுங்க இயலாது .

 அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனக்கு இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் ஸோல்ஜென்ஸ்மா என்ற மருந்து கொடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதனை கேட்ட சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.நம்பிக்கையை இழக்காத பெற்றோர் தங்களின் நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

 இதனையடுத்து மூன்று மாதங்கள் பல்வேறு தரப்பினரும் சிறுவபுக்கு மருந்து வாங்க  நிதி அளித்தனர் . விராட் கோலி , அனுஷ்கா ஷர்மா , அனில் கபூர் , அஜய் தேவ்கான் மற்றும் ஏராளமான பிரபலங்களும் நிதியுதவி அளித்தனர் .சுமார் 65 ஆயிரம் பேரின் நிதியுதவி மூலம் 16 கோடி  ரூபாய் திரட்டப்பட்டது . இதற்கிடையே மருந்துக்கான இறக்குமதி வரி 6 கோடி ரூபாயை மத்திய அரசு தள்ளுபடி செய்தது .

பல போராட்டங்களைக் கடந்து அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து சேர்ந்த மருந்தை மருத்துவர்கள் சிறுவனுக்கு செலுத்தியுள்ளனர். வரும் நாள்களில் குழந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.