மலைகளின் அரசியின் கோடை கால விழா எப்போது தெரியுமா?

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசியின் கோடை  கால விழா எப்போது தெரியுமா?

நீலகிரி | மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி  மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல்,  மே மாதங்களில் நிலவும் குளுகுளு கோடை சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.

அவ்வாறு இதமான காலநிலையை அனுபவிக்க உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படும். 

மேலும் படிக்க | சுற்றுலா பயணிகளிடம் இருந்து 1 டன் ப்ளாஸ்டிக் பறிமுதல் செய்த அதிகாரிகள்...

அதேபோல் இந்த ஆண்டு  கோடை விழா நடத்தப்படுவது குறித்த  உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தோட்டக்கலை துறை இயக்குனர் டாக்டர். பிருந்தாதேவி காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிமிலா மேரி, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | உப்பு ஹட்டுவ பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடிய படுகர்...

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அமிரித் 

உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலக புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை 5 நாட்கள் நடைப்பெற உள்ளது. 

கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7 ஆகிய 2 நாட்கள் 12வது காய்கறி கண்காட்சியும், ரோஜா பூங்காவில் ஆகிய 13,14, 15 ஆகிய மூன்று நாட்கள் 18 வது ரோஜா கண்காட்சியும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள்  63வது பழக்கண்காட்சியும், கூடலூரில் 10 வது வாசனை திராவிய கண்காட்சி 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவித்தார். 

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 5 நாட்கள் நடைபெறும் 125வது மலர் கண்காட்சிக்காக  பூங்காவில் 170 ரகங்களில் 5 லட்சம் மலர்களை உற்பத்தி செய்யும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க | டாஸ்மாக் கடையை மூடி சீல் வைத்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது...