கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா.!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் உண்டியல் காணிக்கை ரூ.79.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா.!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் கொண்டுவரப்பட்டு தற்போது திருப்பதி மலைக்கு நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 10 லட்சத்து 95 ஆயிரத்து 704 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். அவர்கள் மூலம் 79 கோடியே 34 லட்சம் ரூபாய் ஏழுமலையானுக்கு காணிக்கை வருமானமாக கிடைத்தது.

மேலும் கடந்த மாதம் ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பித்து மொட்டை போட்டுக்கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 35 ஆயிரம் ஆக உள்ளது. கடந்த மாதம் பக்தர்கள்  64 லட்சத்து 90 ஆயிரம் லட்டுகளை பக்தர்கள் வாங்கி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.