பிரிந்து சென்ற மனைவி...தனிமையில் தவித்த கணவன்...கடைசியில் நடந்தது என்ன தெரியுமா ?.!!

மனைவியை பிரிந்த கணவன் எடுத்த பகீர் முடிவு மரணத்தில் முடிந்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

பிரிந்து சென்ற மனைவி...தனிமையில் தவித்த கணவன்...கடைசியில் நடந்தது என்ன தெரியுமா ?.!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தனியார் லாட்ஜில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தவரின் அருகே இருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில் இறந்தவர் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ காந்த என்பதும், அவருக்கு திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி ஸ்ரீ காந்தைவிட்டு சென்றதும், அதனால் தனிமையில் தவித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட இளைஞர்கள் இருவரும் இறந்த ஸ்ரீ காந்தின் நண்பர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ஸ்ரீகாந்த தனது நண்பர்களான ஜீவா, மஸ்தா ஆகிய இருவரிடம் தனக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மும்பை செல்ல இருந்த அவரை தடுத்த இரு நண்பர்களும் இதற்கு எதற்காக மும்பை போக வேண்டும், இந்த ஆபரேஷனை தாங்களே செய்து விடுகிறோம் என கூறி யுள்ளனர்.

இதைதொடர்ந்து பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஒரு லாட்ஜ்ஜில் ரூமும் எடுத்துள்ளனர். 3 பேரும் அந்த ரூமில் தங்கியநிலையில், ஸ்ரீகாந்தின் நண்பர்களான இருவரும் யூடியூப் வீடியோ பார்த்து ஸ்ரீகாந்திற்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அதிமான ரத்தம் வெளியேறி அங்கேயே ஸ்ரீகாந்தும் துடிதுடித்து இறந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.