ஏழுமலையானை தரிசிக்க நாள்முழுக்க காத்திருந்த பக்தர்கள் ...!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எம்பெருமானை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இதையும் படிக்க : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி...முதலில் களமிறங்கும் இந்திய அணி!

பல மணிநேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு, உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படுகிறது.

ஒருநாளில் மட்டும் 3 கோடியே 2 லட்சம் ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் சார்பில் உண்டியலில் செலுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.