கைதிகள் கைவண்ணத்தில் உருவான பசுமை பண்ணை - பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை..!

புதுச்சேரி மத்திய சிறையில், கைதிகள் உருவாக்கிய விவசாய பண்ணையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார்.

கைதிகள் கைவண்ணத்தில் உருவான பசுமை பண்ணை - பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை..!

புதுச்சேரி மத்திய சிறையில் கஞ்சா புழக்கம், செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதாக செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கைதிகளின் மனநிலையை மாற்ற சிறைத்துறை நிர்வாகம் கைதிகளை விவசாய பணிகளில் களமிறக்கியது.

இதற்கென சிறை வளாகத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் கத்திரிக்காய், தக்காளி, வெண்டைக்காய் போன்றவற்றை சிறைக்கைதிகள் விவசாயம் செய்யவும், ஆடு, மாடு, கோழி, முயல் போன்றவற்றை வளர்க்கவும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், அங்கு சென்ற தமிழிசை சவுந்தரராஜன், கைதிகளின் பசுமை பண்ணையை கண்டு வியந்து பாராட்டியதோடு, அவர்களுக்கு பேருதவியாக இருந்த சிறை அதிகாரிகளையும் பாராட்டினார்.