கொரோனா தடுப்பு விதி முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவோர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய காவல் துறையினர்!!

கொரோனா தடுப்பு விதி முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவோர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய காவல் துறையினர்!!

பிரான்ஸ் தலைநகர் , பாரிசுக்குள் நுழைந்து கொரோனா தடுப்பு விதி முறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டி அடித்துள்ளனர். கனடாவில் சரக்கு வாகன ஓட்டுநர்கள் தொடங்கிய எதிர்ப்புப்  போராட்டம் தற்போது அதன் அண்டை நாடுகளிலும் பரவி வருகிறது. கனடாவின் சரக்கு வாகன ஓட்டுநர்கள் , ஹார்ன் ஒலி , எழுப்பி நடத்தி வரும் போராட்டத்தினால் மற்றவர்களும் ஈர்க்கப்பட்டு, அதே போன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையெ பாரிஸ் நகருக்குள்  நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியுள்ளனர்.