இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.71 லட்ச பேருக்கு கொரோனா உறுதியானது தொடர்ந்து இன்று பாதிப்பு குறைய தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தாக்கமானது சில நாட்களாக உச்சத்தை தொட்டு மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்த தொடங்கியது.கொரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தது.

இதனிடையில் மேலும் தெரிவித்து இருப்பதாவது நேற்றைய பாதிப்பான 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 மற்றும் அதன் முன் தின பாதிப்பான 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 ஐ விட குறைவானதாக தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 51 ஆயிரத்து 740 பேர் குணமடைந்து உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. 

இதில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 56 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 385 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 157 கோடியே 20 லட்சத்து 41 ஆயிரத்து 825 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.