ஐ.சி.யு.வில் இருக்கும் காங்கிரஸுக்கே தி.மு.க தான் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது - ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!!

ஐ.சி.யு.வில் இருக்கும் காங்கிரஸுக்கே தி.மு.க தான் ஆக்சிஜன் சப்ளை செய்து வருகிறது - ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!!

அமேதியில் நடந்தது என்ன என்பதினை நினைத்து பாருங்கள் அதையே மீண்டும் செய்தால் மக்களால் சுலபமாக கண்டுபிடிக்கப்படுவீர்கள் என ராகுல் காந்திக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்து பேசியுள்ளார். தமிழகத்தில் ஒரு போதும் பா.ஜனதா ஆட்சிக்கு வர முடியாது என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஏற்படுத்திய திடீர் கூச்சலை கேட்டு வழக்கம் போல் மகிழ்ச்சி அடைந்தோம் எனவும் ஆனால் அவர் தனது ஏகபோக முரண்பாடான பேச்சில் தமிழ்நாட்டில் பா.ஜனதா ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது என குறிப்பிட்டு இருந்தார். மகத்துவ மிக்க தமிழ்நாட்டின் மகனாக கூறுகிறேன் விரைவில் தமிழ்நாட்டில் என்ன நடக்கபோகிறது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்றார். உங்களுடைய முரண்பாடான இந்த பேச்சுகளில் விளைவாக தமிழகத்தில் காங்கிரஸ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. தி.மு.க.வில் இருந்து தான் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது. 

பிரதமரின் தொலைநோக்கு பார்வையினை ஏற்றுக்கொண்ட மக்களால் இன்று நாங்கள் புதுவை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளோம். அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் ஆனால் பா.ஜனதா வளர்ச்சியில் இது ஒரு மைல்கல் தான் எங்களின் அடுத்த வெற்றிபயணத்தின் அடுத்த ஜங்சன் தமிழ்நாடு தான் எனவும், 

வரலாற்றினை ஒருபோதும் மறக்காதீர்கள் அமேதியில் என்ன நடந்தது என்பதை நினைத்து பாருங்கள் அதனை மீண்டும் செய்தால் அதேபோன்று மக்களால் சுலபமாக கண்டுபிடிக்கப்படுவீர்கள். நீங்கள் உருவாக்கப்படும் அடுத்த செயற்கையான பிரச்சனைக்குள் நீங்கள் ஓடிப்போகும் வரை தற்போதைக்கு பாய் பை சார் என குறிப்பிட்டு முடித்துள்ளார்.