காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் தான் ஆம் ஆத்மி ...பிரதமர் மோடி.!!

காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மீயும் வெவ்வேறு கட்சி இல்லை என்றும் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் கொள்ளை அடிக்கிறார், மற்றொருவர் டெல்லியில் ஊழல் செய்கிறார் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஜெராக்ஸ் தான் ஆம் ஆத்மி ...பிரதமர் மோடி.!!

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்-ல் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்  பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கூறுகையில

கொரோனா பொதுமுடக்க காலத்தில் இந்தியர்கள் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்ற வகையில் பல்வேறு முயற்சிகளை மத்தியில் ஆளும் அரசு முன்னெடுத்தது. குறிப்பாக பஞ்சாப் மக்களில் தொடங்கி நாட்டில் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு இலவச ரேஷன் பொருட்கள் குறைந்த காலத்தில் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலத்தை முழுவதும் அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பார்க்கிறார்கள்; மேலும் கேப்டன் அம்ரிந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தவறான பாதையில் காங்கிரஸ் கட்சி செல்வதை தடுத்து நிறுத்தினார்! ஆனால் இப்போது அவரும் கூட காங்கிரஸ் கட்சியில் இல்லை என தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி-யும் வெவ்வேறு கட்சியினர் இல்லை என்றும் காங்கிரஸ்  ஒரிஜினல் என்றால் ஆம் ஆத்மீ கட்சி அதன் ஜெராக்ஸ் என கூறிய அவர், ஒருவர் பஞ்சாப் மாநிலத்தில் கொள்ளையடிக்கிறார்! மற்றொருவர் டெல்லியில் ஊழல் செய்கிறார்!. ஒரே தட்டில் சாப்பிட்டு அடித்து கொள்வது போல காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் உள்ளது என விமர்சித்தார்.