12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்தப்படும்!!

நாடு முழுவதும் 93 சதவீதம் பேர் ஒரு தவணை தடுப்பூசியையும், 69.8 சத வீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தி வருகின்றனர்.

12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்தப்படும்!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு தழுவிய அளவில் தேசிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கி வைத்தார்.கோவிஷீல்டு, கோவேக் சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்ததாக பிப்ரவரி 2-ந் தேதி முதல் அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.

மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.கடந்த 3-ந் தேதியில் இருந்து 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தடுப்பூசி நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. முன் எச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இருக்கிறோம். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்திய பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும்.இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று ஒன்றிணைந்து தொற்று நோயை பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்.

இந்திய குழந்தை மருத்துவ அகடாமி முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் பிரமோத் ஜோக் கூறும்போது, குழந்தைகளுக்கான தடுப்பூசி வரம்பை உயர்த்துவது வரவேற்கத்தக்கதாகும். 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிப்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.