தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் பயணம் செய்ய முடியும்: அரசு அதிரடி அறிவிப்பு...

தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடியாக அறிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டால் மட்டுமே மின்சார ரயிலில் பயணம் செய்ய முடியும்: அரசு அதிரடி அறிவிப்பு...
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து பேசிய  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் இதுவரை 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்றும்  ரயிலில் வரும் 15-ம் தேதி முதல் தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட் மற்றும் பாஸை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் மேலும் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் நேரடியாக டிக்கெட் மற்றும் பாஸை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.