தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வலியுறுத்திய கல்லூரி முதல்வர்!! சரமாரியாக தாக்கிய உதவி பேராசிரியர்- வைரல் வீடியோ

தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு  வலியுறுத்திய கல்லூரி முதல்வர்!! சரமாரியாக தாக்கிய உதவி பேராசிரியர்- வைரல் வீடியோ

கல்லூரி முதல்வரை துணை பேராசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் உள்ள பிரபல அரசு கல்லூரியில், துணை பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரம்மதீப் அலுனே. கடந்த 15ம் தேதி, அக்கல்லூரியில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்பட்டிருந்ததையடுத்து இந்நிகழ்ச்சி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பிரம்மதீப்பிடம் கல்லூரி முதல்வர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

ஆனால் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வராததால் ஆத்திரமடைந்த கல்லூரி முதல்வர், தனது அறைக்கு அழைத்ததாக தெரிகிறது. அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தகாத வார்த்தைகளை பயன்படுத்திய பிரம்மதீப், கல்லூரி முதல்வரை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் பிரம்மதீப் மீது வழக்கு பதிந்து, அவரை கைது செய்துள்ளனர்.