லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

லாலு பிரசாத் யாதவ், பீகாரின் முதல்வராக இருந்த சமயத்தில் பல்வேறு ஊழல் வழக்குகளில் ஈடுபட்டதாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் 5 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 5-வது வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை விதித்து ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில் 6-வதாக லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்த போது நிலத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு ரயில்வே துறையில் வேலை வாங்கி தந்தது தொடர்பாக அவர் மீது சிபிஐ அதிகாரிகள் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் இன்று காலை 6 மணி முதல் லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லாலு பிரசாத் யாதாவின் மகள் வீடு உள்பட 17க்கும் மேற்பட்ட இடங்கள் சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.