பெண்ணை திருமணம் செய்துகொள்ள வரதட்சணை வாங்குவது அர்த்தமற்ற செயல் - முதல்வர் நிதீஷ்குமார்!

பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு வரதட்சணை வாங்குவது அர்த்தமற்ற வீண் செயல் என பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பெண்ணை திருமணம் செய்துகொள்ள வரதட்சணை வாங்குவது அர்த்தமற்ற  செயல் - முதல்வர் நிதீஷ்குமார்!

நாடு முழுவதும் திருமணத்திற்கு வரதட்சணை பெறுவதும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதும் தீர்க்கமுடியாத பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் பாட்னாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெண்கள் விடுதியை திறந்து வைத்து பேசிய முதல்வர் நிதீஷ் குமார், பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு வரதட்சணை வாங்குவது அர்த்தமற்ற வீண் செயல் என சாடினார்.

மேலும் பெண்ணை திருமணம் செய்தால் மட்டுமே குழந்தை பிறக்கும், தலைமுறை விருத்தியடையும் என தெரிவித்த அவர், ஒரு ஆணை மற்றொரு ஆண் திருமணம் செய்தால் குழந்தை பிறக்காது எனவும் கூறினார்.