பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு...45 பேர் பலி.!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 45 பேர் பலியாகினர்.

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு...45 பேர் பலி.!!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையான இன்று வழக்கம்போல் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போது மசூதிக்குள் நுழைய முயற்சித்த இரண்டு மர்மநபர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை நோக்கி தூப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பணியில் இருந்த ஒரு காவலர் படுகாயமடைந்தார்,மற்றொருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

அந்தநேரம் மசூதியில் பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதில் 45 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைத 65 பேர் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.