அனைத்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி.. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உற்சாக கொண்டாட்டம்!!

நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததையடுத்து, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அனைத்து தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி.. திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உற்சாக கொண்டாட்டம்!!

4 மாநிலங்களில் உள்ள ஒரு எம்.பி. மற்றும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் அசன்சோல் எம்.பி. மற்றும் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. சத்தீஷ்கரில் கைராகர், பீகாரில் போச்சான், மராட்டியத்தில் கோலாப்பூர் வடக்கு ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது.

ஒரு எம்.பி., 4 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. மேற்க வங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் அக்னிமித்ரா பவுல் தோல்வியடைந்தார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பிரபல நடிகர் சத்ருகன் சின்கா வெற்றி பெற்றார்.

மேற்கு வங்க சட்டசபைக்கு நடைபெற்ற இரண்டு இடைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.  இதேபோல், பீகார் மாநிலம் போச்ச ஹான் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததையடுத்து, திரிணாமுல் காங்கிரசார் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.