உறுதிமொழிப் பத்திரம் எழுதி கொடுத்து - நூதன பிரச்சாரம் மேற்கொள்ளும் பாஜக வேட்பாளர் !!

உறுதிமொழிப் பத்திரம் எழுதி கொடுத்து - நூதன பிரச்சாரம் மேற்கொள்ளும் பாஜக வேட்பாளர் !!

காரைக்குடியில் பாஜக வேட்பாளர் 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து போட்டு, ஓட்டு கேட்டு வந்ததிற்கு சாட்சியாக போட்டோ எடுத்து கொடுத்து நூதன பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகம் முழுவது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்கள் பல்வேறு முறையில் வாக்காளர்களை கவர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பாண்டித்துரை வாக்காளர்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகளை எழுதி அதில் கையெழுத்திட்டு சொன்னதைச் செய்வேன் என்று கூறி வாக்கு கேட்டு நான் உங்களிடம் வந்ததற்கு சாட்சியாக அவர்களுடன் போட் எடுத்து உடனடியாக போட்டோவை வாக்களர்கள் கையில் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகிறார்.