ராஜீவ்காந்தி கேல்ரத்னா என்ற பெயரில் இனி விருதுகள் வழங்கப்படாது: பிரதமர் மோடி அறிவிப்பு

ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் என்ற பெயரில் கேல் ரத்னா இனி அழைக்கப் படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கேல்ரத்னா என்ற பெயரில் இனி விருதுகள் வழங்கப்படாது: பிரதமர் மோடி அறிவிப்பு
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ராஜீவ்காந்தி கேல்ரத்னா என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. இது வருங்காலங்களில், பிரபல ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இதுபற்றி ட்விட்டரில் அவர், கேல் ரத்னா விருதுக்கு பிரபல ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பெயரை வைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் இருந்து மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று, வருங்காலங்களில் கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான் சந்த் பெயர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
 இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் மேஜர் தயான் சந்த். 1928 முதல் 1964 வரையிலான காலகட்டங்களில் நடந்த 8 ஒலிம்பிக் விளையாட்டுக்களில், இவர் இடம் பெற்றிருந்த இந்திய அணி, 7 போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத் தக்கது.