இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்த விபரீதம்!! 5 நிமிட இடைவெளியில் நடந்த அதிசயம்...

5 நிமிட இடைவெளியில் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து1!
இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்த விபரீதம்!! 5 நிமிட இடைவெளியில் நடந்த அதிசயம்...
Published on
Updated on
1 min read

கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு புறப்பட இருந்த இரண்டு விமானங்கள் மோத இருந்து, 5 நிமிட இடைவெளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

துபாய் விமான நிலையத்தில்  கடந்த ஜனவரி 9-ம் தேதியன்று இரவு, அரபு எமிரேட்ஸ் நிறுவனத்தின் போயிங் 777  இ.கே-524 என்ற விமானம் இரவு 9.45 மணிக்கு ஐதராபாத்துக்கும், அதே நிறுவனத்தின் மற்றொரு விமானமான போயிங் 777 இ.கே-568, 5 நிமிட இடைவெளியில் பெங்களுருக்கும் சரியாக 5 நிமிட இடைவெளியில் இந்தியாவுக்கு புறப்பட இருந்தது. இந்த  இரண்டு விமானங்களுக்கும்  ஒரே ஓடு பாதை தளம் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் துபாய் - ஐதராபாத் விமானம் புறப்படுவதற்காக அறிவித்தவுடன், மிக வேகமாக 30 ஆர் என்ற ஓடுபாதைக்கு சென்றது. அப்போது, அந்த ஓடுபாதையில் ஏற்கனவே பெங்களுருவுக்கு செல்ல இருந்த விமானம் இருந்துள்ளது.

இந்நிலையில் விமானங்கள் புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிந்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக ஒரு விமானத்தின் டேக்ஆப்-ஐ  நிறுத்துமாறு அறிவித்து பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர். இல்லையென்றால் இரு விமானங்களும் மோதி மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும்.

மேலும், இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியபோது, அதிகாரிகள்  தக்க சமயத்தில் எடுத்த நடவடிக்கையால் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டு 200-க்கும் மேற்பட்ட பயணிகள் தப்பித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இரண்டு விமானங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பதிவு செய்யப்பட்டவை மற்றும் துபாயில் இந்த சம்பவம் நடந்ததால், சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பின் விதிகளின்படி நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் அதை விசாரிக்கும். இருப்பினும், விசாரணை அறிக்கை கிடைக்கும்போது மற்றும் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுள்ளோம்" என்று மூத்த டிஜிசிஏ அதிகாரி ஒருவர் கூறினார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com