மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 19ம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 19ம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 19ம் தேதி தொடங்கி  ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு...

கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது.  ஜூலை 19ம் தேதி தொடங்கும் "மழைக்கால கூட்டத்தொடர்"ஆகஸ்ட் 13ம் தேதி வரை  நடைபெறும் என மக்களவை தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற வளாகம் மற்றும் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

மேலும், காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடர் மாலை 6 மணி வரை 19 நாட்கள் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.தடுப்பூசி செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்றும்  தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத எம். பிக்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்வது அவசியம் எனவும்  சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால  கூட்டத்தொடரில் 40 மசோதக்கள் மற்றும் 5 அவசர சட்டங்கள்   நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சுமூகமாக கூட்டத்தொடரை நடத்துவது குறித்து அனைத்து கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் மக்களவை  மற்றும்  மாநிலங்களவை தலைவர்கள் ஜூலை 18ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.