மைசூரில் 65 வயது மூதாட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்ட 85 வயது முதியவர்....
65 வயதுடைய மூதாட்டியை 85 வயது முதியவரின் காதல் திருமணம் முதியவரது 9 பிள்ளைகள் மற்றும் மருமகன்,மருமகள் என பேரக்குழந்தைகளின் முன்னால் நிகழ்ந்துள்ளது.

மைசூரு உதயகரி கவுசியா நகரில் வசித்து வரும் முஸ்தபா 85 வயதான முதியவர் இறைச்சிகடையின் உரிமையாளர் ஆவார். இவரது மனைவி குர்ஷித் பேகம் இவர்களுக்கு 9 பிள்ளைகள் எனவும் அனைவருக்கும் திருமணமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்தோடு தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் முஸ்தபா தனது மனைவி குர்ஷித் பேகமோடு தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது மனைவி குர்ஷித் பேகம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக உடல்னலக்குறைவால் காலமானார்.மனைவி இறந்த பின்பு தனிமையில் வாழ்ந்து வந்த முஸ்தபா அடிக்கடி உடல்நிலை குன்றி போவதால் தனக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளார். இதன்பிறகு முஸ்தபா அதே பகுதியில் வசித்து வந்த பார்த்திமா என்பவரை சந்தித்து வந்துள்ளார்.இருவரும் நன்றாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையில் முஸ்தபா தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் பாத்திமாவிடம் சென்று எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழலாம் என பாத்திமா பேகமிடம் கூறியுள்ளார். முதிர்ந்த வயதில் இது தேவையா என பலரும் கேலி செய்து வந்த நிலையில் பாத்திமா தனது விருப்பத்தை முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளார்.
இவர்களது திருமணமானது முஸ்தபாவின் மகன்கள்,மருமகள்கள் என பேரக்குழந்தைகளுக்கு மத்தியில் அனைவரின் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்று உள்ளது.மேலும் அவர்களே முன்னின்று முஸ்தபா மற்றும் பாத்திமாவின் திருமணத்தினை நடத்தியதாக சொல்லப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இருவரின் திருமணம் எளிய முறையில் வீட்டிலே நடைப்பெற்றதாக கூறுகின்றனர். பின்னர் புதுமண தம்பதி இருவரும் அனைவரிடமும் ஆசி பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து மைசுரு பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக சொல்கின்றனர்.